வியாழன், 14 ஜூன், 2012

ஆர்க்கிமிடீஸ் 

ஆர்க்கிமிடீஸ்
செந்நெறிக் கிரேக்க மெய்யியல்
பண்டைய மெய்யியல்
Domenico-Fetti Archimedes 1620.jpg
சிந்தனையில் ஆர்க்கிமிடீஸ் பெட்டிஎன்பவர் வரைந்தது. (1620)
முழுப் பெயர்சிராக்கூசின் ஆர்க்கிமிடீஸ் (கிரேக்கம்: Άρχιμήδης)
பிறப்புc. கிமு 287 (சிராக்கூஸ், சிசிலி,மக்னா கிரீசியா)
இறப்புc. கிமு 212 (Syracuse)
சிந்தனை
மரபு(கள்)
அலெக்சாந்திரியாவின் இயூக்கிளிட்
இயற்கை மெய்யியல்
முக்கிய
ஆர்வங்கள்
கணிதம், இயற்பியல்,பொறியியல்,வானியல்,கண்டுபிடிப்பு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
ஆர்க்கிமிடீசு தத்துவம்,நீர்நிலையியல்,நெம்புகோல்கள்,
infinitesimals
ஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும்,இயற்பியலாளரும், பொறியியலாளரும், கண்டுபிடிப்பாளரும்,வானியலாளரும் ஆவார். இவரைப்பற்றிக் குறைந்த தகவல்களே கிடைக்கின்ற போதும் இவர் பண்டைக் காலத்தின் முன்னணி அறிவியலாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். நீர்நிலையியல்,நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும்,நெம்புகோல் தத்துவத்தை விளக்கியதும் இயற்பியல் வளர்ச்சிக்கு இவரது பங்களிப்புக்களாகும். திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
ஆக்கிமிடீஸ் பண்டைக்காலத்தின் மிகச் சிறந்த கணிதவியலாளர்மட்டுமன்றி எக்காலத்திலும் மிகச் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக