| தொமஸ் அல்வா எடிசன் |

"Genius is one percent inspiration, ninety-nine percent perspiration." – Thomas Alva Edison, Harper's Monthly(September 1932)
|
| பிறப்பு | தொமஸ் அல்வா எடிசன் பெப்ரவரி 11, 1847 மிலன், ஓஹியோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
| இறப்பு | அக்டோபர் 18 1931(அகவை 84) வெஸ்ட் ஆரஞ்சு, நியூஜெர்சி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
| கல்வி | பள்ளியில் இருந்து நீக்கப்பட்டவர் |
| பணி | கண்டுபிடிப்பாளர், அறிவியலாளர், விஞ்ஞானி, தொழிலதிபர் |
| சமயம் | டெய்சம் |
| பெற்றோர் | சாமுவேல் ஓக்டென் எடிசன், ஜூனியர். (1804–1896) நேன்சி மேத்தீவ்ஸ் எலியட் (1810–1871) |
| வாழ்க்கைத் துணை | மேரி ஸ்டில்வெல் (தி. 1871–1884) மினா மில்லர் (தி. 1886–1931) |
| பிள்ளைகள் | மேரியன் எஸ்டில்லா எடிசன்(1873–1965) தாமசு ஆல்வா எடிசன் ஜூனியர் (1876–1935) வில்லியம் லெஸ்லீ எடிசன் (1878–1937) மேடலைன் எடிசன் (1888–1979) சார்லஸ் எடிசன் (1890–1969) தியோடேர் மில்லர் எடிசன் (1898–1992) |
| உறவினர்கள் | லெவிஸ் மில்லர் (மாமனார்) |
| கையொப்பம் |  |
தாமசு ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒருஅமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர்.1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.
தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின்காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும்ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் நிறுவனம் (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.